விஜய் + OPS கூட்டணி.. முடிவை தெரிவித்தார்…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on தை 4, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். அதேசமயம் NDA கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று கூறி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகினர். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்நிலையில் NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் ஓபிஎஸ்ஐ சந்தித்து பேசியதால் மீண்டும் அவர் NDA கூட்டணியில் இணைவார் என்று கூறப்பட்டது. ஓபிஎஸ் தரப்புக்கு கூட்டணியில் 3 சீட்டு ஒதுக்கியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இது தவறான தகவல் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதனால் அவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.