#BREAKING: அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்… விஜய்யின் தவெக-வில் இணைந்த ‘மீசை ராஜேந்திரன்’… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on வைகாசி 26, 2026

Spread the love

தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அதிமுகவிலிருந்து விலகிய முக்கியப் பிரமுகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தேமுதிகவில் சீட் கிடைக்காத விரக்தியில் கடந்த தேர்தலின் போது அதிமுகவில் இணைந்து பணியாற்றிய நடிகர் மீசை ராஜேந்திரன், தற்போது அங்கிருந்தும் விலகி தவெகவில் இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் முறைப்படி கட்சியில் இணைந்தார்.

இந்த அரசியல் மாற்றத்தில் மிக முக்கியமாக, அதிமுகவின் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் என். ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இந்த இணைவு நிகழ்வு நடைபெற்றது. இசக்கி சுப்பையா மற்றும் நடிகர் மீசை ராஜேந்திரனுடன் சேர்ந்து, அதிமுகவின் செய்தி தொடர்பாளர் அதி வீரபாண்டியன் மற்றும் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.