“காதல், கல்யாணம், டைவர்ஸ், ரிப்பீட்டு”… 3வது கணவரையும் விவாகரத்து செய்த பிரபல நடிகை… ரசிகர்கள் ஷாக்…!

By Nanthini on நவம்பர் 17, 2025

Spread the love

தன்னுடைய திருமண உறவை முறித்துக் கொண்டதை நடிகை மீரா வாசுதேவன் அறிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் விபின் உடனான திருமண உறவையே அவர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் நடிகை மீரா வாசுதேவன். 2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். என் வாழ்க்கையின் மிக அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் நான் இருக்கின்றேன் என்று தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து மீரா instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி மீரா மற்றும் விபின் ஆகியோருக்கு திருமணம் நடந்தது.

Meera Vasudevan Third Divorce : கல்யாணம்... டைவர்ஸ்... ரிப்பீட்டு..! 3வது  கணவரை விவாகரத்து செய்த ரவி மோகன் பட நடிகை..! | Actress Meera Vasudevan  Announces Third Divorce From Vipin Puthiyankam | Asianet News Tamil

   

கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலில் நடந்த சடங்குகளுக்கு பிறகு இருவரும் அதிகாரப்பூர்வமாக பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தன்மத்ரா திரைப்படம் மூலமாக மலையாள ரசிகர்களின் பிரியமான நடிகையாக மாறியவர்தான் இவர். குடும்ப விளக்கு உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். அந்த சீரியலின் ஒளிப்பதிவாளர் ஆன விபீனை திருமணம் செய்து கொண்டார். இது மீராவின் மூன்றாவது திருமணம் ஆகும்.

   

Actor Meera Vasudevan ties the knot for the third time | பிரபல நடிகை மீரா  வாசுதேவனுக்கு 3வது திருமணம்

 

இதற்கு முன்னதாக விஷால் அகர்வால் என்பவரை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து அவரை 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு நடிகர் ஜான் கொக்கேனை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து அவரையும் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது இவருடைய மூன்றாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த அடங்கமறு திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.