எனக்கு தம் அடிக்க கத்து குடுத்ததே என் கணவர் தான்.. பிரபல நடிகை மீரா கிருஷ்ணன் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..

By Ranjith Kumar

Published on:

2019 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த “தடம்” படம் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் காணாத வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் மற்றும் ஆக்சன் கதை அமைப்பில் வெளிவந்திருந்தது. இதுவரை இப்படிப்பட்ட ட்விஸ்ட் அண்ட் டர்ன் கொண்ட கதை அமைப்பை யாரும் பார்த்திராததால், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து வித்யா பிரதீப், டேனி ஹோப், மீரா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது தனியார் சேனல் ஒன்றில் மீரா கிருஷ்ணன் அவர்கள் இப்படத்தில் தான் சிகரெட் பிடிக்கும் காட்சி பற்றியும், மகிழ்ச்சிறு மேனி அவர்களைப் பற்றியும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். மீரா கிருஷ்ணன் ; திருமேனி சார் என்கிட்ட கேட்டாரு, இந்த படத்துல தம் அடிக்கிற சீன் இருக்கு, அது உங்களுக்கு நல்லதாகவும் அமையும் கெட்டதாவும் அமையும், அது உங்களுக்கு பிரச்சனை இல்லையா? அப்படின்னு கேட்டாரு.

   

இல்ல சார் இது வெறும் நடிப்பு தானே, அதனால ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டேன். அதனால தம்மடிக்கறதுக்காக என் கணவர் கிட்ட தான் கத்துக்கிட்டேன். ஆனா அவருக்கே தெரியாது, இருந்தாலும் அவர் அடிச்சு கத்துக்கிட்டு எனக்கும் சொல்லித் தந்தாரு. அது மட்டும் இல்லாம சூட்டிங் ஸ்பாட்லயும் கிடைக்கிற நேரத்துல, தம் அடிக்கிறதுக்கு துணை இயக்குனர்கள் எல்லாம் எனக்கு சொல்லித் தருவாங்க. அது இல்லாம, ஒரு சிகரெட் பாக்கெட்டை வீட்டுக்கு கொடுத்துவிட்டு, மேம் இதை தயவு செய்து பழகிடாதீங்க, இந்த படத்துக்காக எப்படி அடிக்கணும்னு மட்டும் கத்துக்கோங்க, அப்படின்னு சொல்லி கொடுத்தாங்க.

டெய்லியும் நானும் என் ஹஸ்பண்ட் மொட்டை மாடியில் வைத்து தான் இதை டெய்லியும் ட்ரை பண்ணுவோம். இப்படித்தான் நான் தம் அடிக்க கத்துக்கிட்டேன். என்று பிரபல நடிகை மீரா கிருஷ்ணன் அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் மகிழ் திருமேனி இயக்குனருடன் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

author avatar
Ranjith Kumar