சன் டிவியை தொடர்ந்து ஜீ தமிழிலும் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்.. ஹீரோவே சொன்ன தகவல்..!

By Mahalakshmi on ஆடி 19, 2024

Spread the love

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த மீனாட்சி பொண்ணுங்க சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சீரியலுக்கு எப்போதும் பஞ்சமே இருக்காது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல்களில் புதிதாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.

   

   

காலை முதல் இரவு வரை வீட்டில் இருக்கும் பெண்களின் பொழுது போக்கிற்காக சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை இறக்கி வருவார்கள். அதற்கு அடுத்தபடியாக இருப்பது ஜீ தமிழ். இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களையும் மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

 

சமீப நாட்களாக டிவி சேனல்கள் அனைத்தும் பழைய சீரியல்களை முடித்துவிட்டு புதுப்புது தொடர்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். சன் டிவி மற்றும் விஜய் டிவியில் பல தொடர்கள் கடந்த மாதம் தான் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் ஒரு முக்கிய சீரியலும் முடிவுக்கு வர உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க. மீனாட்சி தனது கணவர் தன்னை விட்டு பிரிந்த பிறகு மூன்று மகள்களையும் எப்படி கஷ்டப்பட்டு வளர்கின்றார் என்பதை பற்றியும் அம்மா மகளுக்கு இடையே உள்ள பாச போராட்டங்களை பற்றிய கதைதான் இது.

இந்த சீரியலில் ஆரியன் ஹீரோவாக நடித்த வருகின்றார். மேலும் சக்தி என்று கேரக்டரில் புதுமுக நடிகை ஒருவர் நடித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த சீரியல் ஜீ தமிழில் மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வரவுள்ளது. இதனை சீரியலின் நடிகர் ஆரியன் உறுதிப்படுத்தி இருக்கின்றார். அந்த பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.