திமுகவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி… தவெகவில் இணைந்த கொங்கு மண்டல முக்கிய புள்ளி… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on ஆடி 29, 2026

Spread the love

கோவை மாவட்ட திமுகவின் முக்கிய புள்ளியாக வலம் வந்த மீனா ஜெயக்குமார், சமீபத்தில் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார். தவெகவின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மீனா ஜெயக்குமாருக்கு கட்சித் துண்டு போர்த்தி, உறுப்பினர் அட்டையை வழங்கி ஆனந்த் அவரை உற்சாகத்துடன் வரவேற்றார்.

கொங்கு மண்டல திமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த ஒரு முக்கிய நிர்வாகி விலகி, வளர்ந்து வரும் தவெகவில் ஐக்கியமாகியிருப்பது கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.