Categories: சினிமா

விஜயாவை மறந்து மீனா செய்த செயல்… என்ன ஆக போகுதோ…? சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் ரோகினி கிருஷையும் அவளது அம்மாவையும் முத்து மீனா கண்ணில் படாமல் இருப்பதற்கு சிட்டிக்கு வெளியே கிரிஷை ஒரு பள்ளியில் சேர்த்து தூரமாக அவர்களை வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது, இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

இன்றைய எபிசோடில் வீட்டில் மீனா பூ கட்டிக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது அங்கு வந்த விஜயா நான் டான்ஸ் கிளாஸுக்கு போறேன் எனக்கு மதியம் சாப்பாடு எடுத்துட்டு வந்துரு என்று சொல்கிறாள். உடனே அங்கு வந்த முத்து ஏம்மா மீனாவ வேலை சொல்றீங்க ஏன் உங்களுக்கு எடுத்துட்டு போக முடியாதா இல்லனா இந்த வீட்ல வேற யாரும் இல்லையா என்று கேட்கிறான். அதற்கு விஜயா ஒரு மாமியாருக்காக மருமகள் இத கூட செய்ய மாட்டாளா அவ வீட்ல என்ன செய்ற அப்படின்னு கேட்கிறாள்.

உடனே முத்து இந்த வீட்ல அவ்வளவு பேருக்கும் சமையல் பண்ணி வீட்டு வேலை எல்லாம் பார்த்துக்கிறது மீனாதான். அது மட்டும் இல்லாம அவ பூ வேற கட்டி குடுத்துட்டு இருக்கா. இதுல உங்களுக்கு சாப்பாடு வேற எடுத்துட்டு வந்து தரணுமா அப்ப நீங்க அவளுக்கு சம்பளமா போட்டு கொடுங்க அப்படின்னு சண்டை கட்டுகிறான். உடனே அங்கு வந்த அண்ணாமலை ஏன் சத்தம் போடறீங்க நான் தான் வீட்ல சும்மா இருக்கேன் நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து தரேன் விஜயா நீ கெளம்பு அப்படின்னு சொல்கிறார். எப்படியோ எனக்கு யாராவது சாப்பாடு எடுத்துட்டு வாங்க என்று கூறி விஜயா சென்று விடுகிறார். பின்னர் மீனா முத்துவிடம் வேண்டாங்க விட்ருங்கனு சொல்கிறாள். மாமா நீங்க கஷ்டப்பட வேண்டாம் நானே கொண்டு போய் கொடுத்துடறேன் அப்படின்னு சொல்லிட்டு வேலையை பார்க்கிறாள்.

பின்னர் மதிய வேளையில் முத்து, சுருதி, அண்ணாமலை, மீனா எல்லாரும் அமர்ந்து சாப்பிடுகின்றனர். சுருதியையும் மீனாவையும் அவங்க அத்தைக்கு தெரியாம ப்ளான் பண்ணி சண்டை போடுற மாதிரி நடிக்கிறதை அண்ணாமலை பாராட்டுகிறார். பின்னர் மீனா விஜயாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்கிறாள்.

போகும் வழியில் செருப்பு தைக்கும் தொழிலை செய்யும் ஒரு பாட்டி தாத்தா இருக்கின்றனர். அந்த பாட்டி மயக்கம் அடைந்து படுத்திருக்கிறார். உடனே மீனா வண்டியை நிறுத்தி என்னாச்சு தாத்தா ஏன் பாட்டியை எழுப்பிட்டு இருக்கீங்க என்று கேட்கிறாள். உடனே அந்த தாத்தா சாப்ட்டு ரெண்டு நாள் ஆச்சும்மா பசி மயக்கத்தில் இருக்கா அப்படின்னு அந்த தாத்தா சொல்றாரு. உடனே மீனா தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை அந்த பாட்டி தாத்தாவையும் சாப்பிட வைத்து விடுகிறாள். மேலும் கையில் காசும் கொடுத்து நான் உங்களுக்கு தினம் அப்பப்போ வந்து பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். பின்னர் யோசிக்கிறாள் அத்தைக்கு கொண்டு போற சாப்பாடே இப்படி பண்ணிட்டோம் எப்படி அத்தையை சமாளிக்கிறது என்ன பண்ணலாம் அப்படின்னு யோசிச்சு கொண்டே இருக்கிறாள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

7 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

7 மணத்தியாலங்கள் ago