ராஜமுந்திரியில் நடைபெற்ற ஹிட் அண்ட் ரன் சம்பவத்தில் படுகாயமடைந்த பிரியங்கா என்ற மருத்துவ மாணவி, செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், காரில் வந்த நபர் பிரியங்காவின் மீது மூன்று முறை அடுத்தடுத்து காரை மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கை கொலை முயற்சிப் பிரிவின் கீழ் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவப் படித்து வந்த இளம் பெண் ஒருவர் இத்தகைய கொடூரமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
