“திமுக ஒரு நச்சுப்பாம்பு” கூட்டணியிலிருந்து விலகும் மதிமுக..? தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 13, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள வேளையில், திமுக கூட்டணியில் இருந்து MDMK கட்சி விலகுவது உறுதியாகியுள்ளது. திமுகவின் செயல்பாடுகளை வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மேலும், TVK அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக துரை வைகோ பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், வரும் 27-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, திமுகவை ஒரு “நச்சுப் பாம்பு” என அக்கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் ராஜ் விமர்சித்துக் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து மேலும் ஒரு முக்கியக் கட்சி விலகவிருக்கும் இந்த அதிரடி நகர்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.