மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் ஈரோடு தெற்கு மாவட்ட மதிமுக முன்னாள் செயலாளர் கோபால் மற்றும் காங்கேயம் நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டது மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக தமிழக வெற்றிக் கழகத்துடன் மதிமுக நெருக்கம் காட்டி வரும் சூழலிலும், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக கூட்டணியிலேயே நீடித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், ஈரோடு மண்டல மதிமுகவின் முக்கியப் புள்ளிகள் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமாகியிருப்பது, மதிமுகவை தங்களது பக்கம் இழுக்கத் திட்டமிட்டிருந்த தவெக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியையும் அரசியல் ரீதியாக பலத்த பின்னடைவையும் கொடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
