தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
இதனிடையே மதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ளது. அங்கேயே தொடரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி NDA கூட்டணியில் மதிமுக இணைய உள்ளதாகவும் துரை வைகோவுக்கும் மத்திய அமைச்சராகும் ஆசை இருப்பதாகவும் மல்லை சத்யா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். இதனை முற்றிலும் மருத்துவர வைகோ, தான் எப்போதும் கூட்டணி தர்மத்தை மதிப்பவன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
