சென்னை மாமன்றம் கலைப்பு..? மேயர் பிரியா டிஸ்மிஸ்..? 157 கவுன்சிலர்கள் சொத்துக் கணக்கு தராததால் பதவிகளுக்கு ஆபத்து..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள் சட்டப்படி தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விதிகளின்படி, மக்கள் பிரதிநிதியாகப் பதவியேற்ற 90 நாட்களுக்குள்ளும், அதன்பின்னர் ஆண்டுதோறும் மார்ச் 31-ஆம் தேதிக்குள்ளும் தங்களது சொத்துக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், பெரும்பாலான கவுன்சிலர்கள் இந்த விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்பது தற்போதைய RTI தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விதிமீறல் காரணமாக, சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறிய மக்கள் பிரதிநிதிகள் தங்களது தகுதியை இழந்து பதவி நீக்கம் செய்யப்பட சட்டத்தில் இடமுள்ளது. சென்னை மாநகராட்சியின் மொத்தமுள்ள 200 வார்டுகளில், மேயர் உட்பட 157 பேர் இந்த தகுதி நீக்கப் பட்டியலின் கீழ் வர வாய்ப்புள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை மாமன்றம் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.