சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் அதிக அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் செல்வம் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
இதனால் அவருடைய ஆளுமை தன்மை இந்த நிகழ்ச்சியில் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதனால் ரசிகர்களுக்கு அதிகமாக பரீட்சையமான போட்டியாளர்கள் இந்த சீசனில் களமிறங்க உள்ளதாகவும் அதற்கான தீவிர ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தொடக்க நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை நிகழ்ச்சி குழு செய்து வருகின்றது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு வரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மயில்சாமிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அன்பு மயில்சாமிக்கு அவர்கள் மூலமாக அதிக ஆதரவு பிக் பாஸ் வாக்கெடுப்பில் கிடைக்கலாம் என இப்போதே நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.