பிரபல காமெடி நடிகரான மயில்சாமி சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். நான் அவன் இல்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்கள் மயில்சாமிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. முன்னணி நடிகர்களுடன் இணைந்து மயில்சாமி ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மயில்சாமி உயிரிழந்தார். சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய மயில்சாமிக்கு யுவன் மயில்சாமி என்ற ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமி பற்றி நடிகர் ஆர் ஜே பாலாஜி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அப்போது, மயில்சாமி சார் என்கிட்ட ஒரு நாள் இந்த விஷயத்தை சொன்னாரு. அதாவது இவர் சினிமாவில் நடிகராக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஏதோ ஒரு நடிகரின் பென்ஸ் காரை போய் தொட்டு பார்த்துள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் இவரை தள்ளிவிட்டு ஒரு மாதிரி பேசி விட்டார். அது மயில்சாமிக்கு மிகுந்த மன வருத்தமாக போக கண்கலங்கி அழுதுள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பிற்கு அவர் பென்ஸ் காரில் வந்து இறங்கினார்.உடனே நான் அவரைப் பார்த்து சார் சூப்பர் சார், எப்ப கார் வாங்கினீங்க நல்லா இருக்கு என்று கேட்டேன். அதற்கு அவர், ஆமா என்னோட ஐம்பதாவது பிறந்தநாளுக்கு என் பொண்டாட்டி எனக்கு வாங்கி கொடுத்தா.

ஒரு நாள் ஆசையா ஒருத்தரோட பென்ஸ் கார தொட்டுப் பார்த்தேன் அதற்கு அவன் அடிச்சிட்டான் அதை என் பொண்டாட்டி கிட்ட போய் சொல்லி அழுதேன். அவ தான் எனக்கு இத பரிசா வாங்கி கொடுத்தா. என்னோட ஒட்டு மொத்த சினிமா journey-ம் இதுல தான் இருக்குன்னு என்கிட்ட அவர் சொன்னாரு. அந்த கார் வாங்கினது இல்ல அவருக்கு அவ்வளவு சந்தோஷம் என்று ஆர்.ஜே பாலாஜி மயில்சாமி பற்றி பேசியுள்ளார்.
