பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி சில வாரங்கள் தான் ஆகிறது. இருந்தாலும் பல்வேறு சர்ச்சைகள் வந்து பரபரப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இன்று முதல்முறையாக ஓப்பன் நாமினேஷன் நடந்த போது பலரும் மாயா மீது புகார் அளித்து நாமினேட் செய்தனர்.
அப்போது மணிச்சந்திராவுக்கும் மாயாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மற்றவர்களிடம் பேசும் போது மாயா அதிர்ச்சியளிக்கும் புகார் கூறினார். உன் ஜாதி என்னன்னு கேட்கிறான் அது பெரிய தப்பு.

அதற்கு மன்னிப்பே இல்லை என மணிச்சந்திரா மீது மாயா புகார் கூறியுள்ளார். இதனையடுத்து ஜோவிகா இது குறித்து மணியிடம் கேட்கிறார். எல்லோரும் சிக்கன் சாப்பிடும் போது மாயா மட்டும் பீஸ் போட்டுக் கொள்ளாமல் வெறும் கிரேவி மட்டும் போட்டு சாப்பிட்டார்.
அதனை பார்த்து ஏன் சாப்பிட மாட்டியா நீ என்ன பிராமினா என கேட்டேன் அவ்வளவுதான் என மணி விளக்கம் அளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் பல பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் மணி மீது மாயா கூறிய புகார் பூதாகரமாக வெடித்துள்ளது.

