விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீசன் 1 முடிவடைந்ததை தொடர்ந்து மௌன ராகம் 2 சீசன் ஒளிபரப்பானது. இந்த சீசனும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சீரியல் நடிகை ரவீனா தாகா. மௌனராகம் சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ரவீனா ‘ஜில்லா’வில் குட்டி பெண்ணாக விஜயுடன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’ படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது .சினிமா தவிர்த்து பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஜீ தமிழில் ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் இவர் கடைக்குட்டி தங்கச்சியாக பல சேட்டைகளை செய்து அசத்தி வருகிறார்.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்பொழுது குட்டி பெண்ணாக இருந்த ரவீனா இப்போது வேற லெவலில் மாறி உள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்சீவுடன் தான் நடிப்பேன் என்று கூறி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரவீனா.

இவருக்கு 18 வயது தான் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் தனது அண்ணன் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்’ உங்களுக்கு இப்படி ஒரு அண்ணன் உள்ளாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram
