பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில், கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. மைதானத்திற்கு மேலே அந்தரத்தில் தொங்கியபடி காட்சிகளைப் பதிவு செய்யும் ‘ஸ்பைடர் கேம்’ முதல் இன்னிங்ஸின் போது திடீரென மைதானத்திற்கு மிகத் தாழ்வான உயரத்தில் சிக்கிக்கொண்டது.
இதன் காரணமாக ஆட்டம் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது. மோட்டார் பொருத்தப்பட்ட வின்ச்ச்களில் ஏற்பட்ட கோளாறால் கேமராவை நகர்த்த முடியாமல் போனதால், தொழில்நுட்ப வல்லுநர்கள் மேனுவலாக அதை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, முழுமையான பாதுகாப்பு ஆய்வுக்குப் பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. தேசிய மைதானத்தில் நிகழ்ந்த இந்தத் தாமதத்திற்குப் பிறகு ஆட்டம் விறுவிறுப்பாகத் தொடர்ந்தது.
இந்நிலையில் இறுதியில், பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சல்மி அணி அபாரமாக விளையாடி, கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக ஒருதரப்பான வெற்றியைப் பதிவு செய்தது. மைதானத்தில் நிலவிய இந்தச் சங்கடமான சூழல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…