திருவிழா விருந்தில் நடந்த ஒரு சிறிய தவறு.. மட்டன் துண்டு தொண்டையில் சிக்கி விவசாயி பலியான அதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை உலுக்கும் மரணம்…!!!

Spread the love

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள இங்குர்த்தி கிராமத்தில், துர்கம்மா திருவிழாக் கொண்டாட்டத்தின் போது நடந்த ஒரு துயரச் சம்பவத்தில் 50 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்தார். கிராமத்தில் நடைபெற்ற திருவிழா விருந்தில் மற்ற கிராம மக்களுடன் இணைந்து அவர் உணவு அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் சாப்பிட்ட மட்டன் துண்டு ஒன்று அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளானார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் உணவுக் குழாயில் சிக்கிய இறைச்சித் துண்டு சுவாசப் பாதையை அடைத்ததே அவரது மரணத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மகிழ்ச்சியாகத் தொடங்கிய திருவிழாக் கொண்டாட்டம், இந்தத் துரதிர்ஷ்டவசமான மரணத்தால் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rajeshwari

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

7 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

7 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

7 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

7 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

7 மணத்தியாலங்கள் ago