தமிழகச் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று கோவையில் இருந்து உதகமண்டலத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அண்ணாமலை தரையிறங்கியதும் அவரது ஹெலிகாப்டரில் இருந்த இருக்கைகள் மற்றும் பைகளை அங்குலம் அங்குலமாகச் சோதித்த அதிகாரிகள், அதில் ஆவணங்களைத் தவிர வேறு எதுவும் இல்லாததை உறுதி செய்த பின்னரே அங்கிருந்து சென்றனர்.
அண்ணாமலையைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வாகனத்தையும் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னணி நடிகராக இருந்து அரசியலில் களம் கண்டுள்ள விஜய்யின் வாகனம் சோதனையிடப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசியல் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தலைவர்களின் வாகனங்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சீமான் ஆகியோரின் வாகனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். தேர்தல் ஜனநாயக ரீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இத்தகைய சோதனைகள் வழக்கம் என்றாலும், முக்கியத் தலைவர்கள் குறிவைக்கப்படுவது தொண்டர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…