“கர்நாடகா போகாதீங்க விஜயே”….. கொந்தளித்த ஸ்டாலின்…. விஜய் அரசுக்கு சாவுமணி?.. டெல்டாவில் இறங்கும் உதயநிதி… ஆகஸ்ட் 3-ல் நடக்கப்போகும் பெரிய சம்பவம்…..!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

காவிரி நீர் உரிமையை நிலைநாட்டவும், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை உடனடியாக அறிவிக்கவும் வலியுறுத்தி, தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பனகல் கட்டிடம் அருகே காலை 10 மணியளவில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், அனைத்து விவசாயச் சங்கங்களும், ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளும் திரளாகப் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

   

கர்நாடக அரசால் மேகதாது அணை விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையிலும், மேட்டூர் அணை திறக்கப்படாததால் தமிழ்நாட்டில் சுமார் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டு, 2,500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் காலம் தாழ்த்துவது போன்ற செயல்களால் தவெக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாகத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தூங்குமூஞ்சி அரசு செவிசாய்க்காவிட்டால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

   

அதேவேளையில், காவிரி பிரச்னை குறித்துப் பேசுவதற்காகத் தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா சென்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தகைய பயணம் காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும் எனக் கூறி எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இப்போக்கு மாநில உரிமைக்கு எதிரானது என்றும் விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

 

தனது திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாவதில் எந்தச் சிக்கலும் வரக்கூடாது என்பதற்காகவே முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் வெளிப்படையாகப் பேசாமல் மௌனம் காப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது. அரசின் மெத்தனப் போக்கையும், மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையில் காட்டும் அலட்சியத்தையும் கண்டித்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டம், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும் குரலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.