பகீர் வீடியோ: வீட்டுக்கு வந்த மசாஜ் ஊழியர் செய்த காரியம்.. “தலைமுடியைப் பிடித்து இழுத்து”… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்….!

By Nanthini on தை 24, 2026

Spread the love

மும்பை வடாலா பகுதியில் மசாஜ் முன்பதிவை ரத்து செய்த விவகாரத்தில், பெண் வாடிக்கையாளரை மசாஜ் ஊழியர் ஒருவரே சரமாரியாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷெஹ்னாஸ் சையத் என்ற பெண்மணி, ஆன்லைன் தளம் மூலம் மசாஜ் சேவைக்கு முன்பதிவு செய்திருந்தார். கடந்த புதன்கிழமை மாலை அவரது வீட்டிற்கு வந்த பெண் ஊழியரின் நடத்தை திருப்திகரமாக இல்லாததாலும், அவர் கொண்டு வந்த மசாஜ் படுக்கை அறையில் வைப்பதற்கு வசதியாக இல்லாததாலும் ஷெஹ்னாஸ் அந்த சேவையை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர், ஷெஹ்னாஸுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தாக்குதலில் இறங்கியுள்ளார். ஷெஹ்னாஸின் முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும் நகங்களால் பிறாண்டியும் அவர் கொடூரமாகத் தாக்கியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்தக் கைக்கலப்பின் போது, தடுக்க வந்த ஷெஹ்னாஸின் 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார். மசாஜ் ஊழியரின் இந்த ஆவேசமான செயல் அங்கிருந்த கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

   

இந்தச் சம்பவம் தொடர்பாக ஷெஹ்னாஸ் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்தப் பெண் ஊழியரைப் பணியிலிருந்து உடனடியாக நீக்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் சேவை தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்த வீடியோ, இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.