“பதவி கட்சி போடும் பிச்சை” அதிருப்தியில் கூண்டோடு விலகல்… அதிர்ச்சியில் துரை வைகோ…!!

By Soundarya on வைகாசி 1, 2026

Spread the love

தேர்தல் முடிந்த நிலையில் மதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துரை வைகோ மீதான அதிருப்தி காரணமாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கூண்டோடு விலக முடிவெடுத்துள்ளனர். குறிப்பாக, ‘பதவி மற்றும் பொறுப்பு என்பதெல்லாம் கட்சி போடும் பிச்சை’ என்று துரை வைகோ பேசியதாகக் கூறப்படும் கருத்து, கட்சித் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தால் அதிருப்தியடைந்த மதிமுக மாநில இளைஞரணி துணைத் தலைவர் சோமசுந்தரம் மற்றும் கோபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் மாற்று அரசியல் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது மதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.