அவனை விட்ருங்கடா… காதலனுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு… ஓடிய திருமணமான பெண்… கணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி… டெல்லியில் பரபரப்பு சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 14, 2026

Spread the love

டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில் அப்பெண் தன் காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். நடு இரவில் இருவரையும் ஒன்றாகக் கண்ட குடும்பத்தினரும் ஊர்மக்களும் அதிர்ச்சியடைந்து, இருவரையும் பிடித்து விடிய விடியத் தாக்கியுள்ளனர்.

அடிதடிக்குப் பிறகு, அக்குடும்பத்தினர் அந்த இளைஞரைப் பிடித்து ராஜ்புரா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தன் காதலன் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டதை அறிந்து பதற்றமடைந்த அப்பெண், குடும்பத்தினருக்குத் தெரியாமல் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி, தன் காதலனை விடுவிப்பதற்காகக் காவல் நிலையத்தை எட்டியுள்ளார்.

   

https://twitter.com/ashishpaswan0/status/2099379979905814604/video/1

   

ஆனால், விஷயம் தெரிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று, அப்பெண்ணைப் பலவந்தமாக இழுத்து வந்து மீண்டும் வீட்டில் பூட்டி வைத்தனர். தற்போது அப்பெண் வீட்டில் அடைக்கப்பட்டும், அடிவாங்கிய காதலன் காவல் நிலையத்திலும் இருக்கும் இந்தச் சம்பவம் ராஜ்புரா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.