சிம்பிளாக 10 பேரை மட்டும் வைத்து திருமணத்தை முடித்த ஆடுகளம் பட நடிகை.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்..!!

By Priya Ram

Published on:

நடிகை டாப்ஸி ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஆறு தேசிய விருதுகளை வென்றது. டாப்ஸிக்கு ரசிகர்களின் ஆதரவும் கிடைத்தது.

   

இதனை அடுத்து காஞ்சனா 2, வந்தான் வென்றான், கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் டாப்ஸி நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் பல ஹிந்தி படங்களிலும் டாப்ஸி நடித்துள்ளார். கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டங்கி திரைப்படத்தில் டாப்ஸி நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போ என்பவருடன் டாப்ஸி பழக ஆரம்பித்தார். அதன் பிறகு இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

கடந்த 23ஆம் தேதி குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினர்கள் என சிலரை மட்டும் வைத்துக்கொண்டு டாப்ஸிக்கும் அவரது காதலனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் கோலிவுட் பாலிவுட் பிரபலங்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. இப்போது சத்தம் இல்லாமல் டாப்ஸிக்கு திருமணமானதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Priya Ram