நடிகர் விஜய் தேவர்கொண்டாவுக்கும் , நடிகை ராஷ்மிகாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறித்து விஜய் தேவர்கொண்டா பதிலளித்துள்ளார்.இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தின் மூலம் புகழ்பெற்றவர்.அதனை தொடர்ந்து அவர் நோட்டா, கீதா கோவிந்தன்,டியர் காம்ரேட் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து கீதா கோவிந்தன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் டியர் காம்ரேட் படத்திலும் ஜோடியாக நடித்தனர்.தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் விஜய் நடித்த வாரிசு மற்றும் கார்த்திக் நடித்த சுல்தான் படத்திலும் நடித்திருந்தார். நடிகர் தேவர்கொண்டா நடித்த குஷி படம் கடந்த ஆண்டு வெளியானது.
இதனை தொடர்ந்து ராஷ்மிகா ஹிந்தியில் ரன்பீர் கபூர்க்கு ஜோடியாக அனிமல் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இந்நிலையில் அவ்வப்போது ராஷ்மிகாவும் விஜய் தேவர்கொண்டாவும் காதலித்து வருவதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்துகொண்டிருந்தன. இதனை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து இருவரும் கருத்து தெரிவிக்காத நிலையில் , விஜய் தேவர்கொண்டா லைப்ஸ்டைல் ஆசியாவுக்கு அளித்த நேர்காணலில் அவர் இது குறித்த விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் நான் பிப்ரவரியில் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை. இது எப்படியிருக்கிறது என்றால் ஊடகங்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் ஆகா விரும்புகிறார்கள்.இந்த வதந்தியை ஒவ்வொரு ஆண்டும் கேட்டுவருகிறேன். அவர்கள் என்னை கையேடு பிடித்து திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் என்று கூறினார்.
