பெங்களூருவில் ஹலசூரின் பகுதியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்த பெற்ற சோமேஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திருமணத்திற்காக புகழ்பெற்ற இந்த கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் சமீபகாலமாக இங்கு திருமணங்களுக்கு அனுமதிப்பதில்லை. பெங்களூருவில் பெரும்பாலான திருமணங்கள் இந்த கோவிலில் தான் நடந்த நிலையில் திருமணத்திற்கு புகழ்பெற்ற ஒரு கோவிலாக இது விளங்கியது.
சமீப காலமாக அந்த கோவிலில் திருமணம் செய்த ஜோடிகள் பலர் விவாகரத்து செய்ய முடிவு செய்து திருமணம் நடந்ததற்கான ஆவணங்களை கேட்டு கோவிலுக்கு வருவதால் கோவில் நிர்வாகம் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி இங்கு திருமண விழாக்கள் நடத்தப்படாது என்று கோயில் வாசலில் முக்கிய அறிவிப்பை வைத்துள்ளது.
