Connect with us

‘ஒரு படத்துல ரெண்டு, மூணு கெட்டப்பா..??’ என்னடா குழப்புறீங்க… விஷால் கொடுத்த அப்டேட்..

VIDEOS

‘ஒரு படத்துல ரெண்டு, மூணு கெட்டப்பா..??’ என்னடா குழப்புறீங்க… விஷால் கொடுத்த அப்டேட்..

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.

   

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சுனில், ,செல்வராகவன் மற்றும் அபிநயா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் டைம் ட்ராவல் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட டப்பிங் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் மார்க் ஆண்டனியின் முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்த பாடலை டி ராஜேந்தர் பாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்து விஷால் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் இரண்டு எஸ் ஜே சூர்யா மற்றும் மூன்று விஷால் என வேடமிட்டு நடித்துள்ளதாக அவர் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini
Continue Reading
To Top