தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம். இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளார்.

இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. வருகிற டிசம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக இட்லி கடை என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் குபேரா, இசைஞானி இளையராஜாவின் பயோபிக் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கர்ணன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்போது வந்த தகவலின் படி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலிருந்து தனுஷ் வெளியேறி விட்டாராம். அந்த படத்தின் பட்ஜெட் 140 கோடி ரூபாய்.

அதில் தனுஷின் சம்பளம் மட்டுமே 55 கோடி. புரொடக்ஷன் 70 கோடி. படத்திற்கு பட்ஜெட் மேலும் அதிகமாகும் என்பதால் தனுஷ் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டாராம். அவருக்கு பதிலாக கார்த்தி அந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
