TVK-வுக்கு விழுந்த பலத்த அடி… கைகுலுக்கி உள்ளே வந்த 50+ தொண்டர்கள்… எடப்பாடியில் செம குஷியில் துள்ளிய இபிஎஸ்…!

By Nanthini on வைகாசி 31, 2026

Spread the love

சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்முறையாகத் தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு அவர் வருகை தந்துள்ளார். எடப்பாடியில் உள்ள அரசு பயணியர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவரது வருகையைக் கொண்டாடும் வகையில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், மலர் மாலைகள் அணிவித்தும், வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நெகிழ்ச்சியான வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தத் தொகுதி வருகையின் போது, எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். குறிப்பாக, அமமுக முன்னாள் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவருமான பூக்கடை சேகர் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். மாவட்ட அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இவரது இந்தத் தாய்க்கழக இணைப்பு, அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

   

அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தனர். எடப்பாடி அதிமுக நகர செயலாளர் முருகன் தலைமையில் திரண்ட அவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி, அதிமுகவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைந்த பூக்கடை சேகர் உள்ளிட்ட அனைத்து புதிய உறுப்பினர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொண்டார்.