உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட காற்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளார். கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் மண்ணில் புதையுண்டுள்ளார்கள்.மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனிஆயடுத்து காவல்துறை, துணைப் பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் பிற பேரிடர் மீட்புக் குழுக்களை சம்பவ இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு அடியில் சுமார் 10-12 பேர் புதைந்திருக்கலாம் என்றும், 20-25 ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கிராமவாசிகள் கூறுகிறார்கள். இந்நிலையில் இந்த காட்டாற்று வெள்ளம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
VIDEO | Uttarakhand: Cloudburst causes massive destruction in Dharali Uttarkashi. More details are awaited.#Cloudburst #UttarakhandNews
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/vFx2rEUHvv
— Press Trust of India (@PTI_News) August 5, 2025
