BREAKING: திருப்பரங்குன்றத்தில் பதற்றம்… கூட்ட நெரிசலில் பலர் மயக்கம்.. சாமி கும்பிடப் போன இடத்தில் நேர்ந்த சோகம்… தமிழகத்தில் பரபரப்பு….!

By Nanthini on வைகாசி 30, 2026

Spread the love

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியுள்ளது. வெயிலின் தாக்கம் மற்றும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தின் காரணமாக ஏற்பட்ட இந்த நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

அவர்களை உடனடியாக மீட்ட கோயில் ஊழியர்களும் மருத்துவக் குழுவினரும் அங்கேயே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேவேளையில், இத்தகைய முக்கிய திருவிழா நாள்களில் மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளையோ அல்லது போதிய குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளையோ செய்து தரவில்லை என சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் குமுறலையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.