விஜய்யின் “நா ரெடி” பாடலுக்கு Vibe ஆன நடிகர் மன்சூர் அலிகான்… இணையத்தை கலக்கும் வீடியோ…

By Archana on ஆனி 30, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடிப்பில் உருவான கேப்டன் திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. வில்லனாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல்களிலும், காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார்.

   

இவர் சட்டமன்றத் தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேசையாக போட்டியிட்டு படுத்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு சினிமாவில் மீண்டும் என்று கொடுத்துள்ளார். தற்போது இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

   

 

அதேசமயம் அவரின் மகன் அலி கான் துக்ளக் ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.இந்நிலையில் மன்சூர் அலிகான் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தில் இடம்பெற்ற நா ரெடி பாடல் வெளியிடப்பட்டது. இதனிடையே மன்சூர் அலிகான் அந்த பாட்டிற்கு டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.