“எப்படி இருந்த நான் இப்படி  ஆயிட்டேன்”.. தனது இளமைக்கால புகைப்படத்தை பகிர்ந்த CWC குரேஷி…

By Archana on ஆனி 30, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று சினிமாவுக்குள் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு நடித்து வருகின்றார்கள். ஆனால், தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் ஒரு சிலர் மட்டுமே வெள்ளிதிரையில் வருகின்றார்கள். ஒரு சிலர் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இன்னும் சின்ன திரையில் இருந்து வருகின்றார்கள்.

   

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோ வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் KPY என்ற நிகழ்ச்சியும் ஒன்று. அந்த நிகழ்ச்சி மூலம் இன்று பிரபலமானவர்தான் குரேஷி. இவர் காமெடியை ரியாலிட்டி  ஷோக்கள் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

   

 

அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மிமிக்ரி செய்யும் திறமை யை வைத்து விஜய் டிவியில்  திறமையி ன் மூலம் கடின உழைப்பினாலும் இன்று விஜய் டிவியில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் கலக்கபோவது யாரு சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அதனைத் தொடர்ந்து  சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் உ தயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘சரவணன் இருக்க பயமேன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் தற்பொழுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருந்து வருகின்றார். தற்பொழுது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தும் விதமாக அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த பதிவு….