BREAKING: தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… இறுதி மூச்சு வரை அவரோடுதான்…. தவெக-வில் இணைந்த மன்சூர் அலிகான்…!

By Nanthini on ஆனி 20, 2026

Spread the love

நடிகரும் அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிகாரப்பூர்வமாகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆகியோருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள அவர், தனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்தக் கட்சியிலேயே பயணிப்பேன் என்று உணர்ச்சிபொங்கக் கூறியுள்ளார்.

இனிவரும் காலங்களில் கட்சியின் வெற்றிப் பாதையில் தவெக தலைவர் விஜய்யின் கரங்களை உறுதியாகப் பிடித்துக்கொண்டு என்றென்றும் அவருடன் இணைந்து களப்பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதி அளித்தார். மேலும், கடந்த ‘லியோ’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே “தமிழகத்தின் நாளைய தீர்ப்பு” என்று தான் தவெக தலைவர் விஜய்யைக் குறிப்பிட்டுப் பேசியதை மன்சூர் அலிகான் இந்த நிகழ்வின் போது நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.