Categories: சினிமா

கஜினி படமே நான் தயாரிக்க வேண்டியது… நான்தான் முருகதாஸ சூர்யாகிட்ட அனுப்பி வச்சேன் – மனோபாலா பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன திரைப்படம் கஜினி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சேலம் சந்திரசேகர் தயாரிப்பில் சூர்யா, அசின், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த  படம் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

தீனா படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவில்  ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தீனா படத்துக்குப் பிறகு அஜித் அசின் கூட்டணியில் முருகதாஸ் மிரட்டல் என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

இந்த படத்துக்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து ஷூட்டிங் வரை சென்றது. ஆனால் அப்போது அஜித்துக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழ அப்போது முருகதாஸ் அஜித் பக்கம் நிற்காமல், தயாரிப்பாளரின் பக்கம் நின்றுள்ளார். அந்த படத்தில் இருந்து அஜித் விலக, அவருக்கு பதிலாக சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் இயக்கியுள்ளார். அந்த படமும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

அதன் பின்னர் அதே படத்தை இந்தியில் எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டைக் கொடுத்தார் முருகதாஸ். இந்நிலையில் கஜினி படம் பற்றி ஒரு ஆச்சர்யத் தகவலை மறைந்த நடிகரும் இயக்குனருமான மனோபாலா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதில் “ஏ ஆர் முருகதாஸ் என்னிடம் கொஞ்ச நாள் வேலைப் பார்த்தார். ரமணாவுக்குப் பின்னர் கஜினி படத்துக்காக அவர் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார். அப்போது அந்த படத்தைத் தானே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன். நான்தான் அவரிடம் சூர்யா பிதாமகன் மற்றும் காக்க காக்க ஆகிய படங்கள் வந்தால் பெரிய ஹீரோவாகி விடுவார் என்று சொல்லி  சூர்யாவிடம் அனுப்பி கதை சொல்ல வைத்தேன். அப்படிதான் கஜினி படத்தில் சூர்யா வந்தார். ஆனால் கடைசியில் என்னால் அந்த படத்தை தயாரிக்க முடியாமல் போனது.” எனக் கூறியுள்ளார்.

ஆனால் கடைசியில் மனோ பாலா கஜினி படத்தில் ஒரு முக்கியமான நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…

57 seconds ago

FLASH NEWS: “5 தொகுதிகள்… ஒரே நாளில் தேர்தல்”….. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்…. காலையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…

4 minutes ago

“அத பண்ணாதீங்க… இப்படி பண்ணி பாருங்க”…. முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…

8 minutes ago

“வி.எஸ்.பாபுவுக்கு என்னாச்சு..?”….. 1 மாதமாக தொடரும் கமுக்கம்….. வெள்ளை அறிக்கை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி போட்ட குண்டு….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…

13 minutes ago

பதவி பறிபோகாதா?.. ஆனால் ‘ஷாக்’ காத்திருக்கு…. அமைச்சரவை மாற்றத்தில் CM விஜயின் மாஸ் மூவ்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரவலான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், தங்களது…

16 minutes ago