முதல் முறையாக தமிழில் அதிக வசூலை அள்ளிய “மஞ்சுமெல் பாய்ஸ்”.. கமலுக்கும் இந்த படத்திற்கும் என்ன தொடர்பு..?

By Ranjith Kumar on பிப்ரவரி 29, 2024

Spread the love

மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தற்போது மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழிகளில் உள்ள திரையரங்குகளில் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் படி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் அவர்கள் இயக்கத்தில் பரவ பிலிம் ஸ்டுடியோ நிறுவனத்தின் அதிபர் பாபு சகீர் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியாகி மலையாளத்தில் பெரிதளவு ஓடியது,

தற்போது தமிழில் இது மிக சிறப்பாக ஓடி தற்போது தமிழில் மட்டும் 2 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதே போல் ஓடி பெரிதலாக பெயரை பெற்று பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளிக் குவித்துள்ளது, வரும் வெள்ளிக்கிழமை அன்று உலக அளவில் இதை வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். தற்போது இந்திய அளவில் ஒரு மாத காலமாக ஓடி, 50 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளியுள்ளது, தற்போது இது ஓடும் ஓட்டத்தை பார்த்தால் 100 கோடி வரை தொட்டுவிடும் என்று தெரிகிறது, மஞ்சுமா பாய்ஸ் படமும் 100 கோடி கிளப்பில் இணைய உள்ளதாக கிட்டத்தட்ட தெரிய வருகிறது.

   

ஆக்சன் மற்றும் திரில்லர் கதையான இப்படம், கொடைக்கானலுக்கு நண்பர்கள் கூடி ட்ரிப் போகும் பொழுது அங்கு நடக்கும் டிராமா காமெடி அனைத்தும் கலந்து ஒரு டிராப்பில் சிக்கிய நபரை காப்பாற்றுவது தான் இப்படத்தின் கதைகளாகும். இப்படத்தில் நடித்து இடம்பெற்ற சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி, எஸ்.பொதுவால், லால் ஜூனியர், தீபக், பரம்போல் அபிராம், ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரஹ்மான், சந்து சலீம்குமார், விஷ்ணு ரெகு ஆகியோரின் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

   

இப்படத்தை வெற்றியைக் கண்டு பல பிரமுகர்கள் வாழ்த்தி வருகிறார்கள். தற்போது கமல்ஹாசன் இப்படக்குல வினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். படத்தில் ஒரு முக்கியமான கிளைமாக்ஸ் சீனில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த “குணா” படத்தில் “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” இந்த பாடல் அந்த சிச்சுவேஷனுக்கு பெரிதலும் பக்கபலமாக அமைந்திருக்கிறது என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.