#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் மணிமேகலை கோமாளியாக இருந்தார். சீசன் 4 நிகழ்ச்சியில் பாதியில் இருந்து விலகினார். இதனை அடுத்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை ஆங்கராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விளங்குவதாக இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சிகரமான போஸ்ட் போட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் தொடர மாட்டேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு, நேர்மையாக இருப்பேன்.
சுயமரியாதையை விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை. எந்த சூழ்நிலையிலும் சுயமரியாதையை இழக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். புகழ், பணம், தொழில் அவையெல்லாம் எனக்கு இரண்டாவது பட்சம் தான். எனக்கு சுயமரியாதை தான் முக்கியம். இதனால் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன்.
இந்த நிகழ்ச்சி மற்றொரு பெண் தொகுப்பாளினியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நிகழ்ச்சியில் தனது பயணத்தை ஆரம்பித்த பொறுப்பாளர் ஒருவர் வந்த வேலையை மறந்து விட்டு ஆங்கரிங் பணியில் தலையிட்டு என் வேலையை தடுக்கிறார்.முன்பு நான் ரசித்து பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இது கிடையாது. 2010 ஆம் ஆண்டு முதல் நான் தொகுப்பாளினியாக இருக்கிறேன்.
என் அனுபவத்தில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை பார்த்திருக்கிறேன். என் வேலையை கெடுத்த நபர் நன்றாக இருக்க வேண்டும். நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களின் பணிகள் பாதிக்கப்படாது. என் மீது அன்பு செலுத்தியவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். குப்பி கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…