#image_title
நடிகை மேகா ஆகாஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சிம்புவுடன் சேர்ந்து மேகா ஆகாஷ் வந்த ராஜாவாகத்தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால் அந்த படம் படு தோல்வியை சந்தித்தது. தனுசுக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார்.இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் படம் ரசிகர்களை கவரவில்லை. படத்தில் மேகா ஆகாஷின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சந்தானம் நடிப்பில் ரிலீசான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் மேகா ஆகாஷ் தனது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணுவை திருமணம் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் மேகா ஆகாஷுக்கும் சாய் விஷ்ணுவுக்கும் நேற்று திருமணம் விமர்சையாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் ஏராளமான திரை பிரபலங்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#image_title
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…