இயக்குனர் அவதாரம் எடுக்கும் மணிகண்டன்.. முதல் படமே அந்த சூப்பர் ஹீரோ உடனா?.. அப்போ 1000 கோடி வசூல் கன்பார்ம்..!

By Nanthini on தை 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் குட் நைட் திரைப்படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர்தான் நடிகர் மணிகண்டன். இயக்குனர் கனவுடன் கோலிவுட்டை வலம் வந்து கொண்டிருந்த அவருக்கு கிடைத்தது என்னவோ நடிகர் வாய்ப்புதான். அதனை சிறப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டார். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் சிறப்பான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளால் குட் நைட் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து அவரின் நடிப்பில் லவ்வர் திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. குட் நைட் திரைப்படமும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வருகின்றார்.

19 வயது தான்.. "அதை” இப்போ நினைத்தாலும் கை, கால் நடுக்கம் வந்துவிடும்..நடிகர்  மணிகண்டன் வருத்தம் | Actor Manikandan spoke about a terrible incident that  happened to him at the ...

   

மேலும் இயக்குனர் கனவையும் விட்டுவிடாமல் ஸ்கிரிப்ட் மணிகண்டன் ரெடி செய்து வருகின்றார். இவர் ஹீரோ ஆவதற்கு முன்பு காமெடியனாக, மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்து விக்ரம் வேதா திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி அதன் பிறகு பல திரைப்படங்களில் சிறிய சிறிய ரோல்களில் நடித்து ஹீரோவாக வளர்ந்தார். இவர் மெட்ராஸ், கபாலி மற்றும் காலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும் பல குரல்களில் டப்பிங் பேசுவதிலும் இவர் கில்லாடி தான். நடிகர் விஜய் சேதுபதிக்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் இவர்தான் டப்பிங் பேசியுள்ளார். அண்மையில் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு மட்டுமல்லாமல் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் கிஷோருக்கும் மணிகண்டன் தான் டப்பிங் பேசினார்.

   

தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக 'குடும்பஸ்தன்' இருக்கும்” - நடிகர்  மணிகண்டன் Iruthi theerppu : Tamil Investigative Magazine | Latest tamil  news | 24/7 News | Breaking News | Live News

 

இதனைத் தவிர கோட் திரைப்படத்தில் விஜயகாந்துக்கு குரல் கொடுத்தது மற்றும் வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சனுக்கு குரல் கொடுத்தது எல்லாமே இவர்தான். ஹீரோவான பிறகும் டப்பிங் கலைஞராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றார். தற்போது குடும்பஸ்தன் திரைப்படம் மூலம் இவர் ஒரு வெற்றியை கொடுத்துள்ளார். இன்று திரையரங்குகளில் ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

விஜய் சேதுபதி சொல்லி நான் கேட்காமல் இருந்ததில்லை - மணிகண்டன் நெகிழ்ச்சி |  Tamil cinema actor manikandan speech goes viral

அதிலும் இவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் பாக்ஸ் ஆபீஸில் ஆயிரம் கோடி வசூல் செய்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவர் நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் அள்ளிய நிலையில் தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகின்றார். இவருடன் நீண்ட காலமாக பழகி வரும் மணிகண்டன் தன்னிடம் உள்ள கதை ஒன்றை அவரிடம் சொல்ல அது விஜய் சேதுபதிக்கு பிடித்துப் போனதால் அவரும் ஓகே சொல்லிவிட்டார். இதனால் விரைவில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ள படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தெரிகிறது.