தொடர்ச்சியாக 3 வெற்றி கனிகளை ருசித்த All in All அழகு ராஜா… Promising Actor ஆக உருவெடுத்த மணிகண்டன்…

By admin on தை 25, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நாயகனாக இருக்கிறார் மணிகண்டன். ஆரம்பத்தில் பாய்ஸ், கிச்சா வயது 16, காதல் fm போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது தவிர ஒரு சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து வந்தார் மணிகண்டன்.

   

ஆனால் மணிகண்டனுக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது ஜெய் பீம் திரைப்படம். இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. அனைவரின் கவனத்தையும் ஒரே படத்தின் மூலம் ஈர்த்து விட்டார் மணிகண்டன். அதை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

   

ஜெய் பீம் தொடர்ந்து குட் நைட் திரைப்படத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து லவ்வர் திரைப்படமும் நடித்திருந்தார். இந்த படத்துக்கும் அவருக்கு நல்ல விமர்சனமே வந்தது. அவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. என்ன இந்த பையன் ரொம்ப சூப்பரா எதார்த்தமா நடிக்கிறாரே என்று அனைவரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு இருந்தார் மணிகண்டன்.

 

தற்போது இவரது நடிப்பில் குடும்பஸ்தன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல தனது எதார்த்தமான அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மணிகண்டன். இதுவரை பார்த்த மக்கள் மிகவும் நல்ல விமர்சனங்களையே கூறி இருக்கிறார்கள். தொடர்ந்து குட் நைட் லவ்வர் குடும்பஸ்தன் என மூன்று படங்களுமே வெற்றி படமாக மணிகண்டனுக்கு அமைந்துவிட்டது.

படத்தைப் பார்த்த எல்லோருமே மணிகண்டன் கதை தேர்ந்தெடுக்கும் விதம், பக்கத்து வீட்டு பையன் போல அவரது நடிப்பு இருப்பதால் பார்வையாளர்களிடம் கனேக்ட்டாக முடிகிறது. இவரது படம் அடுத்தது எப்ப வரும் என்று எதிர்பார்ப்பை மக்களுக்குள் தூண்டி விட்டார் மணிகண்டன். அதனால் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து இருக்கிறார் மணிகண்டன். அடுத்தடுத்து இவர் படங்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.