தங்கச்சி ஆபரேஷனுக்கு உதவி.. கல்யாணத்துக்கு ரூ.3 லட்சம்… மணிகண்டன் குடும்பத்திற்கு விஜய் சேதுபதி செய்த Help..!

By Soundarya on தை 25, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் குட் நைட் திரைப்படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர்தான் நடிகர் மணிகண்டன். இயக்குனர் கனவுடன் கோலிவுட்டை வலம் வந்து கொண்டிருந்த அவருக்கு கிடைத்தது என்னவோ நடிகர் வாய்ப்புதான். அதனை சிறப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டார். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் சிறப்பான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளால் குட் நைட் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து அவரின் நடிப்பில் லவ்வர் திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. குட் நைட் திரைப்படமும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வருகின்றார்.

   

மேலும் இயக்குனர் கனவையும் விட்டுவிடாமல் ஸ்கிரிப்ட் மணிகண்டன் ரெடி செய்து வருகின்றார். இவர் ஹீரோ ஆவதற்கு முன்பு காமெடியனாக, மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்து விக்ரம் வேதா திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி அதன் பிறகு பல திரைப்படங்களில் சிறிய சிறிய ரோல்களில் நடித்து ஹீரோவாக வளர்ந்தார். இவர் மெட்ராஸ், கபாலி மற்றும் காலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும் பல குரல்களில் டப்பிங் பேசுவதிலும் இவர் கில்லாடி தான். நடிகர் விஜய் சேதுபதிக்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் இவர்தான் டப்பிங் பேசியுள்ளார்.

   

 

அண்மையில் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு மட்டுமல்லாமல் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் கிஷோருக்கும் மணிகண்டன் தான் டப்பிங் பேசினார். இதனைத் தவிர கோட் திரைப்படத்தில் விஜயகாந்துக்கு குரல் கொடுத்தது மற்றும் வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சனுக்கு குரல் கொடுத்தது எல்லாமே இவர்தான். ஹீரோவான பிறகும் டப்பிங் கலைஞராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றார். தற்போது குடும்பஸ்தன் திரைப்படம் மூலம் இவர் ஒரு வெற்றியை கொடுத்துள்ளார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாளே 1.5 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “காதலும் கடந்து போகும் பட ஷூட்டிங்ல விஜய் சேதுபதி சார் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். முதல் சந்திப்பிலயே நாங்க ரொம்பவே நெருக்கமா இருந்தோம். அப்பறம் அவர் என் தங்கையோட ஆபரேஷனுக்கு உதவி செஞ்சார். என்  தங்கையோட கல்யாணத்துக்கு முறைபடி கூட பத்திரிகை நான் வைக்கல. ஆனா அவரே போன் பண்ணி கேட்டுட்டு கல்யாணத்துக்கு வந்தாரு. வந்து வீட்டுக்கு போறப்போ என் கையில் 3 லட்சம் கொடுத்து வச்சிக்கோடா ன்னு குடுத்துட்டு போனாரு. அந்தப் பணத்துலதான் நான் கல்யாணத்தை நடத்த முடிந்தது” என்று பேசியுள்ளார்.