இந்த நடிகர்களுக்கு எல்லாம் டப்பிங் பேசியது மணிகண்டனா?… நம்பவே முடியலையே – அவரே பகிர்ந்த தகவல்!

By vinoth on தை 22, 2025

Spread the love

காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் மணிகண்டன். அதன் பின்னர் ஜெய் பீம் படத்தில் அவருடைய நடிப்பின் மூலமாக அனைவருடைய கவனத்தை ஈர்த்திருந்தார்.

அதன் பின்னர் இவர் கதாநாயகனாக நடித்த குட்னைட் என்ற திரைப்படம் மிகப்பெரிய கவனத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது. அவர் அவர் நடித்த லவ்வர் திரைப்படமும் அவரை ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்தியது. தற்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸாகிறது.

   

மணிகண்டன் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் .  விக்ரம் வேதா மற்றும் ஜெய் பீம் போன்ற படங்களில் அவர் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் இவர் “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். அந்த படத்தில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம் வணிக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

   

 

மணிகண்டன் ஒரு மிமிக்ரி கலைஞரும் கூட. அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளார். இதனால் அவர் பல திரைப்படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார். அதன் மூலம்தான் அவருக்கு நடிக்கவே வாய்ப்புக் கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதியின் படங்களில் எதாவது சில வசனங்கள் டப் செய்ய அவர் ஆள் இல்லை என்றால் உடனே மணிகண்டன்தான் பேசிக்கொடுப்பாராம். அதுவும் விஜய் சேதுபதியின் சம்மதத்தோடு. அதே போல சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனின் குரலை ஏ ஐ தொழில்நுட்பத்தில் கொண்டுவர டப்பிங் பேசியதே மணிகண்டன்தானாம். அதே போல இந்தியன் 2 படத்தில் மறைந்த நடிகர்களான மனோ பாலா மற்றும் விவேக் ஆகியோருக்கும் டப்பிங் பேசியுள்ளார்.