திடீர் டுவிஸ்ட்…. மாணிக்கம் தாகூர் வெற்றி…. விஜய பிரபாகரன் எடுத்த அதிரடி முடிவு… தமிழக அரசியலில் பரபரப்பு….!

By Nanthini on கார்த்திகை 4, 2026

Spread the love

2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், எனவே மாணிக்கம் தாகூரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும் கடந்த 2 ஆண்டுகளாக தேமுதிக சார்பில் தீவிர சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்கு எடுத்துச் சென்று நேரத்தை விரயமாக்குவதை விட, மக்கள் பணிகளிலும் பொது வாழ்விலும் கூடுதல் கவனம் செலுத்துவதே சிறந்தது எனக் கருதி, வழக்கை வாபஸ் பெறுவதாக விஜய பிரபாகரன் திடீர் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். விருதுநகர் தொகுதி மக்களின் நலனுக்காகவும், தனது அரசியல் பயணத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுமே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ள நிலைப்பாடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.