வடிவேலுவை வச்சி குப்பை படம் எடுத்தேன்… அந்த டைரக்டருக்கு படம் எடுக்க தெரியல… சரவெடியாய் வெடித்த மாணிக்கம் நாராயணன்..!

By Soundarya on கார்த்திகை 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார்.  என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் வடிவேலு நடித்துள்ளார். அவரது பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

   

இந்நிலையில்   இந்திரலோகத்தில் நா.அழகப்பன்  படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ப்ரொடியூசர் மாணிக்கம் நாராயணன், கங்குவா படத்தை பார்த்துட்டு டைரக்ட் பண்றவன் ஒழுங்கா படத்தை எடுக்காமல் மக்களின் பேச்சு திறமையை நிறுத்த முயற்சி செய்யக் கூடாது. நீங்க ஒழுங்கா படம் எடுக்காமல் 2000 கோடி வசூலிக்கும்னு சொல்லி ஏமாத்தி படத்தை விட்டால் எவ்வளவு நாளைக்கு மக்கள் பார்ப்பாங்க. முதலில் ஏமாற்றுவதை நிறுத்துங்கள்.  அதனால் தான் அரசியல்வாதி ஏமாத்துறாங்க சினிமாக்காரன் உண்மையை பேசுங்க. முட்டாள்தனமான படத்தை எடுத்துட்டு மக்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். நல்ல படத்தை நைட் 12 மணிக்கு ரிலீஸ் செய்தாலும் ஓடும். நல்லா இல்லன்னா படம் ஓடாது. இவனுங்க கத்திகிட்டே இருக்க வேண்டியதுதான்.

   

New Release: Indiralogathil na azhagappan Photo Gallery

 

யானையை கூட்டிட்டு வந்தோம், குதிரையை கூட்டிட்டு வந்தோம்னு. உண்மையா படத்துல கண்டென்ட் இருக்கணும். எமோஷனலா இருக்கணும். ஏன் அமரன் படம் ஓடுது அதுல எமோஷன் இருக்கு. நிறைய டைரக்டர் சாதியை வைத்து எடுத்தால் அவங்களுக்கு எப்படிப்பட்ட மனித உணர்வு தெரியும். மனிதனுக்கு மனதில் ஈரம் இருக்கு. அதை கசிய விட்டால் படம் ஓடும் .இல்லையென்றால் ஓடாது. நான் ஒரு படம் எடுத்தேன் வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்று. அது ஒரு குப்பை படம் குப்பையில் கேவலமான குப்பை. நான் படத்தை பார்த்துட்டு எங்க ஆட்களை அடிக்க போயிட்டேன்.

ஒன்று காமெடி இருக்கணும் இல்ல ஏதாவது இருக்கணும். எதுவுமே இல்லாமல் படம் எடுத்தால் எப்படி ஓடும் அதற்காக நான் புலம்ப முடியாது. யாரையும் குறை சொல்ல முடியாது. யாரையும் குறை சொன்னால் அதற்கு பதில் பேசுவாங்களே தவிர உணர்ந்து பார்க்கிறவன் முன்னேறிடுவான். அது உணர்ந்து பார்க்காமல் தான் வடிவேலுக்கு பின்னடைவு வருது. இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஸ்ரேயாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் சொதப்பினாங்க  என்று பேசியுள்ளார்.