Connect with us

GVM-இன் ‘மின்னலே’ படத்தில் நடிக்க வேண்டாம் என மாதவனுக்கு அட்வைஸ் செய்த மணிரத்னம்.. ஏன் தெரியுமா?

CINEMA

GVM-இன் ‘மின்னலே’ படத்தில் நடிக்க வேண்டாம் என மாதவனுக்கு அட்வைஸ் செய்த மணிரத்னம்.. ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை வாசுதேவ் மேனன் தாய் உமா. இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கௌதம், மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு அவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய திரைப்படங்கள் முக்கியப் படங்களாக அமைந்தன. இவர் இயக்கும் படங்கள் எலலம் உயர் மத்திய தர வகுப்பு இளைஞர்களைப் பற்றிய கதை என்பதால் அந்த தரப்பு இளைஞர்களை வசீகரித்து அவர்களால் கொண்டாடப்பட்டது.

   

இந்நிலையில் மின்னலே திரைப்பட வாய்ப்பை தான் பெற்றது குறித்து அவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பேசியுள்ளார். ஒரு நேர்காணலில் “அப்போது மாதவன் நடித்த அலைபாயுதே திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அவரிடம் நான் மின்னலே கதையை சொன்னேன். அவர் என்னை இயக்குனர் மணிரத்னத்திடம் அழைத்துச்  சென்று கதை சொல்ல சொன்னார்.

 

நான் மிகவும் மதிக்கும் மணிரத்னம் அவர்களைப் பார்த்ததும் பதற்றமாகிவிட்டேன். ஆனாலும் முழுக் கதையையும் அவரிடம் சொன்னேன். ஆனால் நான் சொன்னவிதம் அவரை வெகுவாகக் கவரவில்லை போல. அதே நேரத்தில்தான் மாதவனுக்கு என்னவளே என்ற திரைப்படமும் வந்துள்ளது. அந்த கதை மணிரத்னத்துக்கு பிடித்திருந்தது போல. அதனால் என்னவளே படத்தை முதலில் பண்ண சொல்லி மாதவனுக்கு அறிவுரை சொல்லியுள்ளார்.

அதனால் என்னவளே திரைப்படம் முதலில் தொடங்கியது. அந்த படம் ஷூட்டிங் செல்லும்போதே, மாதவனுக்கு மின்னலே திரைப்படத்தின் மேல் நம்பிக்கை இருந்ததால் அதைத் தொடங்கினோம். அந்த படமும் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் அந்த படத்தில் எனக்கு முழு திருப்தி இல்லை. நான் இப்போது பார்க்கையில் அந்த படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.

Continue Reading
To Top