ஷாக்… இனி ஆபீஸில் உட்கார முடியாது… காடுகளுக்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்… அதிகாரிகளுக்கு விழுந்தது திடீர் கெடு… தமிழக வனத்துறை எடுத்த அதிரடி முடிவு…!!

By Swetha on ஆவணி 14, 2026

Spread the love

தமிழக வனத்துறையில் களப்பணிகளைத் தீவிரப்படுத்தவும், காடுகளின் நேரடிச் சூழலைக் கண்காணிக்கவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட வன அலுவலர்கள் அனைவரும் இனி மாதத்திற்கு குறைந்தபட்சம் 7 நாட்கள் கட்டாயமாக காட்டிற்குள்ளேயே தங்கிப் பணியாற்ற வேண்டும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக வனத்துறை 29 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 62 மாவட்ட வன அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை பெரும்பாலான உயர்மட்ட அதிகாரிகள் அலுவலகப் பணிகளிலேயே அதிக நேரம் செலவிட்டு வந்ததால், காடுகளின் நேரடி நிலவரங்களை நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் சூழல் குறைவாகவே இருந்தது. இந்த நிலையை மாற்றி, கள நிலவரங்களை அதிகாரிகள் துல்லியமாக அறிந்துகொள்ள இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

   

அதிகாரிகள் காட்டிற்குள் நேரடியாகத் தங்கி ஆய்வு செய்வதன் மூலம் வனவிலங்குகளின் நிலை, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உண்மை நிலவரங்களை நேரடியாக அறிய முடியும். மேலும், அதிகாரிகள் ஆய்வில் இருக்கும் காலகட்டத்தில் சுழற்சி முறையில் ஆன்லைன் வழியாக உயர்மட்டக் கூட்டங்களில் பங்கேற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு வனத்துறை நிர்வாகத்தில் பெரும் மாற்றத்தையும், கூடுதல் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.