நடிகர் சூரி நடித்த மண்டாடி படத்துக்கு இப்படி ஒரு கிராக்கியா? – ரஜினி கமல் விஜய் நடித்த படங்களை கூட யாரும் கண்டுக்கலையே?

By Elango on மார்கழி 27, 2025

Spread the love

நடிகர் சூரி இப்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி டைரக்ட் செய்கிறார். சத்யராஜ் மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

சமீபகாலமாக ஓடிடி நிறுவனங்கள் பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்களை டிஜிட்டல் ரைட்ஸ் வாங்க அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல நடிகர்களின் படங்கள் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் ஆகாமல் ரிலீஸ் செய்ய முடியாமல் பல மாதங்களாக முடங்கி கிடக்கின்றன. இந்நிலையில் மண்டாடி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் வாங்க நெட்பிளிக்ஸ் அமேசான் பிரைம் மற்றும் ஜீ டிவி போன்ற ஓடிடி தளங்கள் கடுமையாக போட்டி போடுகின்றன.

   

இதில் ஜீ டிவி மண்டாடி படத்தின் ஓடிடி ரைட்ஸ் வாங்கிவிட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரஜினி கமல் விஜய் நடித்த படங்களையே டிஜிட்டல் ரைட்ஸ் வாங்க ஓடிடி நிறுவனங்கள் கண்டுகொள்ளாத நிலையில், சூரி நடித்த மண்டாடி படத்துக்கு இப்படி ஒரு கிராக்கி ஏற்பட்டுள்ளது. காரணம், படத்தின் கண்டென்ட் ஒரு முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.