மும்பையைச் சேர்ந்த துருபதி என்ற இளம்பெண், ஒரு இசை எட்-டெக் நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியத்தை அவர் கேட்டபோது, அவரது மேலாளர் மற்ற ஊழியர்களுக்கு முன்னிலையில் அவரைப் பகிரங்கமாகக் கத்தி அவமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அவர் வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், அவரது மேலாளர் “எனது விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும், பிடிக்கவில்லை என்றால் நாளைக்கே வேலையை விட்டுச் செல்லலாம்” என்று ஆக்ரோஷமாகக் கத்துவது பதிவாகியுள்ளது. இந்த அவமரியாதையை ஏற்க விரும்பாத அந்தப் பெண், உடனடியாகத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். “குறைந்த சம்பளத்தைப் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் மரியாதைக் குறைவாக நடத்துவதைப் பொறுக்க முடியாது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினர் (Gen Z) வேலையை விடத் தங்களது சுயமரியாதைக்கும், மன நலத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதையே இது காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஊழியர்களைச் சுரண்டும் கார்ப்பரேட் கலாச்சாரம் மற்றும் ஊதியம் இல்லாத கூடுதல் வேலை நேரம் ஆகியவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் தேவை என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…
உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…
புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…
ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…