செம திரில்..! பலாப்பழம் திருட வந்த இடத்தில இப்படியா ஆகணும்…? மரத்தில் வித்தை காட்டிய நபர்… கடைசியில் நடந்த விபரீதம்..!!

Spread the love

பெங்களுருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்திவேல் என்ற 30 வயது நபர் நகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து  அலி அஸ்கர் சாலையில் உள்ள தூதரக அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு பலா மரத்தில் ஏறியுள்ளார். அதாவது அவர் அங்கிருந்த மரத்தில் பலாப்பழங்களைப் பார்த்துவிட்டு, அதை திருடுவதற்காக கண் இமைக்கும் நேரத்தில் 30 அடி மரத்தில் ஏறியதாகக் கூறப்படுகிறது.  அவர் மரத்தின் பாதியளவு உயரத்தில் ஏறியபோதுதான் ஒரு பாதுகாப்பு காவலர் அவரைக் கண்டு கீழே இறங்கும்படி கூறியுள்ளார்.

இதனால் பயத்தில் அவர் ஒரு மரக்கிளையில் சுமார் 5 நிமிடங்கள் தொங்கத் தொடங்கினார்.  இதனையடுத்து இதுகுறித்து காவல்துறை உதவி எண் 112க்கு அழைப்பு வந்தது. அருகிலுள்ள ஹொய்சாலா காவல்துறையினர் இரண்டு நிமிடங்களுக்குள் அங்கு விரைந்து சென்று அவர் சீராக தரையிறங்க உதவும் வகையில் பாதுகாப்பு வலையை விரைவாக தயார் செய்துள்ளார்கள். அதன்பின்னர் அந்த நபர் அந்த வலையில் குதித்துள்ளார். அப்போது தரையில் அடிபட்டு அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் ஆபத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Soundarya

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

7 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

8 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

8 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

8 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

9 மணத்தியாலங்கள் ago