ஆபாச வீடியோவை காட்டி…! “என் மனைவியின் டான்ஸை பார்க்கிறேன்…” பெண்ணிடம் மாட்டிக் கொண்டு கூச்சமில்லாமல் பேசிய நபர்… வீடியோவை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 1, 2026

Spread the love

அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன மின்னூட்ட மையத்தில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது தொலைபேசித் திரையை அந்த இளம் பெண்ணை நோக்கித் திருப்பி ஆபாசக் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாகத் தட்டிக்கேட்டபோது, “நான் என் மனைவியின் நடனக் காணொளியைப் பார்க்கிறேன்” என்று எந்தவிதக் கூச்சமும் இன்றி அந்த நபர் அசட்டையாகப் பதிலளித்துள்ளார்.

அந்த நபரின் அருவருப்பான செயலைக் கண்டு கொதித்தெழுந்த இளம் பெண், உடனடியாகத் தனது தொலைபேசியில் அதனை நேரடி காணொளியாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். திருமணமான வயதான நபர்கள் கூடப் பெண்களிடம் இதுபோன்ற கொடூரமான பார்வைகளோடும் நடத்தோடும் நடந்துகொள்வது வெட்கக்கேடானது என்று அவர் சாடியுள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.